'வாரிசு'ன்னு சொல்றது கொடுமை...! 'அவரோட உத்வேகத்த கொன்னுடாதீங்க...' 'அர்ஜுனும் நானும் ஒரே ஜிம்முக்கு தான் போறோம்...' 'எனக்கு அவர பத்தி நல்லாவே தெரியும்...' - பிரபல பாலிவுட் நடிகர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம், அண்மையில் சென்னையில் வைத்து நடைபெற்றது.

அதில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றிருந்தார். 21 வயதான அர்ஜுனுக்கு அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அவருடைய ஏலம் தொடங்கிய போது, எந்த அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டவில்லை. இந்த நிலையில், அடிப்படை விலைக்கே மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுனை ஏலம் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் பேட்டிங் ஆலோசகராக இருப்பதால், அந்த அணி சச்சினின் வாரிசு என்ற அடிப்படையில் அர்ஜுனை ஏலம் எடுத்ததாக சர்ச்சை கருத்து உருவானது. பலரும் இதனை விமர்சித்தும், கண்டித்தும் கருத்துகளை வெளியிட்டனர்.
இந்த நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான பர்ஹான் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தில், “அர்ஜுன் டெண்டுல்கரும், நானும் ஒரே ஜிம்முக்கு தான் செல்கிறோம். அங்கு அவர் தனது உடலை பராமரிக்க எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதையும், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற அவர் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.
அர்ஜுனை நோக்கி வீசப்படும் ‘வாரிசு’ என்ற வார்த்தை நியாயமற்றது மற்றும் கொடுமையானது. அவரது உத்வேகத்தை கொன்றுவிடாதீர்கள், பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவரை கீழே தள்ளி விடாதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
