VIDEO: 'என்ன டா பேசிட்டு இருக்கும்போதே அடிச்சுட்ட!?'... சச்சினுடன் தாறு மாறாக பாக்ஸிங் செய்த பிரபல வீரரின் மகன்!... தந்தை சொன்ன பதில் என்ன தெரியுமா?... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் இர்ஃபான் பதான் மகன் இம்ரான், பாக்ஸிங் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உலக சாலைப் பாதுகாப்பு தொடருக்க்கான கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய லெஜெண்ட்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியும் விளையாடின. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது. சேவாக், சச்சின் என இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விளையாடினர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேவாக், சச்சின் களத்தில் விளையாடியது ரசிகர்களை கொண்டாடத்தில் திளைத்தது. மேலும், இந்த போட்டியில் சச்சின் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க சேவாக் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார்.
இந்தப்போட்டிக்கு பின்னர், இர்ஃபான் பதான் மகன் இம்ரான், சச்சின் டெண்டுல்கர் உடன் செல்லமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில் சச்சினுடன் குத்துச்சண்டை செய்வதுபோல இம்ரான் விளையாட்டாக குத்துகிறான். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இர்ஃபான் பதான், இம்ரான் என்ன செய்தான் என்று அவனுக்கு இப்போது தெரியாது. ஆனால், அவன் வளர்ந்ததும் சச்சினுடன் பாக்ஸிங் செய்தோம் என்பது அவனுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
#Imran didn’t realise what he did 🤭 he will when he grows up... #boxing @sachin_rt paji😇 pic.twitter.com/RL81yBoYmX
— Irfan Pathan (@IrfanPathan) March 8, 2020
