'நான் அர்ஜுனோட பவுலிங்கை பார்த்துருக்கேன்...' 'சச்சின் மகன் அப்படிங்கறதால செலக்ட் பண்ணல...' - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐ.பி.எல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டதற்கு பல சர்ச்சை கிளம்பின.
அதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் ஆபரேஷன்ஸ் தலைவர், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் மற்றும் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே அர்ஜுன் டெண்டுல்கரை வரவேற்கும் விதமாக பேசிய செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படை விலையான ரூ20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்த நிலையில் பயிற்சியாலர் மகேலா ஜெயவர்தனே கூறும்போது, 'கடந்த 2 ஆண்டுகளாக வலையில் கடுமையாக உழைத்த அர்ஜுன் உண்மையில் அணியில் இணைவது நல்லதுதான். அர்ஜுனின் திறமைகளை மட்டுமே பரிசிளித்து தான் தேர்வு நடந்துள்ளது.
அர்ஜுன் சச்சின் மகன் என்பதால் அவரது தோள்களில் பெரிய சுமை உள்ளது. அர்ஜுன் ஒரு பேட்ஸ்மென் இல்லை,அதிர்ஷ்டகரமாக பவுலர். இது அர்ஜுனுக்கு கற்றுக்கொள்ளும் நிலையாகும். எனவே அவர் மீது அழுத்தத்தை திணிக்காமல் இருந்தால் போதும்' எனக் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து ஜாகீர் கானும், 'அர்ஜுனின் பந்து வீச்சை நானே பார்த்து வியந்துள்ளேன். அபாரத் திறமையுடையவர். சச்சின் டெண்டுல்கர் மகன் என்பதால் ஒரு பெரிய அழுத்தம் அவர் மீது இருக்கவே செய்யும்.இதை அவர் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அவருக்கு சில நுணுக்கங்களை ஏற்கனவே கற்றுக் கொடுத்துள்ளேன். மும்பை இந்தியன்ஸ் அணிச்சூழல் நிச்சயம் அர்ஜுனுக்கு உதவிகரமாகவே இருக்கும்' எனவும் கூறியுள்ளார்.