VIDEO: 'என்னோட ஃபர்ஸ்ட் லவ் இது தான்!'... 'போட்டு உடைத்த சச்சின்'... 'காதலர் தின ஸ்பெஷல்!'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாதலர் தினமான இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு "இதுதான் என் முதல் காதல்" என சச்சின் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் மனைவி, காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், கிரிக்கெட்டின் கடவுளாகப் புகழப்படும் சச்சின், தான் வலைப் பயிற்சியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு "என் முதல் காதல்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன், சச்சினின் மனைவி அஞ்சலி ஒரு பேட்டியில் கூறியதாவது, "அவருடைய முதல் காதல் கிரிக்கெட் தான். அதன் பின் தான் நான்" என கூறியிருந்தார். இப்போது, அதனை வீடியோவாக வெளியிட்டு அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றும் கிரிக்கெட் மீதான தன் காதலை, இன்றைய தினத்தில் பகிர்ந்துள்ளார்.
My First Love! 😀 pic.twitter.com/KsYEYyLaxD
— Sachin Tendulkar (@sachin_rt) February 14, 2020
