“அன்னைக்குதான் ஃபர்ஸ்ட் டைம் அவர் அப்டி பண்றத பாத்தேன்.. அது மறக்க முடியாத நிகழ்வு!”.. ஹர்பஜன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வென்றதைக் கொண்டாடும் வகையில் சச்சின் டெண்டுல்கர் நடனமாடியது தன்னால் மறக்க முடியாத நிகழ்வு என்று இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேது மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. உலகக் கோப்பையை வெற்றிகொண்ட பின்னர் நடந்த கொண்டாட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ள சுவாரஸ்யமான செய்தி வைரலாகியுள்ளது.
அதில், “அன்றுதான் சச்சின் டெண்டுல்கர் ஆடி மகிழ்ந்ததை நான் முதல் முறையாகக் கண்டேன். முதல் முறையாக தன்னைச் சுற்றி நிற்பவர்கள் யார் என்பதையெல்லாம் மறந்து அனைவருடனும் சேர்ந்து இந்திய அணியின் வெற்றியஒக் கொண்டாடும் விதத்தில் ஆடிக் களித்து தனது மகிழ்வை வெளிப்படையாக அனுபவித்தார். அதை நான் எப்போதும் நினைவுகொண்டிருப்பேன்” என்று பேசியுள்ளார்.
