'நான் மொத தடவ அவர மீட் பண்ணி...' 'கைக்குலுக்கிய பிறகு குளிக்கவே தோணல...' 'என் கைய தொட்டு தொட்டு பார்த்துட்டே இருந்தேன்...' - யுவராஜ் சிங் பேச்சு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடனான தன் பயணத்தை நினைவு கூர்ந்து, அவரை முதன்முதலாக சந்தித்து கைகுலுக்கிய நாள் குளிக்கவில்லை என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் தன்னுடைய ஆரம்பகால நினைவுகளை குறித்து கூறும் போது, தான் இந்திய அணிக்கு அறிமுகம் ஆகும் போது சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே சிறந்த பேட்ஸ்மேன் ஆகிவிட்டார் எனவும், அவருடன் கைகுலுக்கியபின் உடலெங்கும் கைகளைத் தேய்த்ததையும் யுவராஜ் சிங் வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து கூறிய யுவராஜ், '2000 ஆம் ஆண்டில், நான் இந்தியாவுக்காக அறிமுகமானேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் விளையாடிய பிறகு, திடீரென்று நான் என் ஹீரோக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது விளையாட்டின் போது சச்சின் டெண்டுல்கர் உள்ளே வந்து ஜகீர் கான், விஜய் தஹியா, புதிய வீரர்களுடன் கைகுலுக்கினார். அவர் திரும்பி இருக்கைக்குச் சென்றபிறகு, நான் என் கையை என் உடல் முழுவதும் தடவினேன். நான் டெண்டுல்கருடன் கைகுலுக்கியதால் நான் குளிக்க கூட விரும்பவில்லை.
எனது சிகிச்சை காலங்களில் நான் அவரிடம் பேசினேன், விளையாட மிகவும் சிரமப்படுகிறேன், நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன் எனக் கூறினேன். அப்போது சச்சின் சொன்னார், 'ஒவ்வொரு முறையும் புயல் வரும் முன் கடல் அமைதியாக செல்கிறது' என்று கூறினார்' என மனம் நெகிழ கூறியுள்ளார்.