'50 ஆண்டுகளில் பெஸ்ட் பேட்ஸ்மேன்!'.. "சச்சின்.. கவாஸ்கர்.. கோலியை" பின்னுக்குத் தள்ளிய வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 50 ஆண்டுகளில் மிகச் சிறந்த இந்தியன் பேட்ஸ்மேன் என்கிற பெயரை விஸ்டம் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் வென்றுள்ளார் ராகுல் டிராவிட்.
இந்த கருத்துக்கணிப்பில் பெற்ற மொத்த வாக்குகளில் 52% ராகுல் டிராவிட் பிடித்துள்ளார். 48 சதவீத வாக்குகளை சச்சின் டெண்டுல்கர் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மூன்றாமிடத்தினை சுனில் கவாஸ்கர் பிடித்துள்ளார்.இதில் 100 சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கரை காட்டிலும் டிராவிட் முந்தியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 11,400 ரசிகர்கள் பங்கேற்றதாகவும், மதியம் வரை இதில் பின்தங்கியிருந்த ராகுல் டிராவிட் கொஞ்சம் கொஞ்சமாக அதிக வாக்குகளை பெறவே, சச்சின் டெண்டுல்கரையும் சுனில் கவாஸ்கரையும் முந்தி முதல் இடத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் நான்காமிடத்தை விராட்கோலி இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
125 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 15 ஆயிரத்து 921 ரன்களையும், டிராவிட் 13 ஆயிரத்து 288 ரன்களையும், கவாஸ்கர் 10 ஆயிரத்து 122 ரன்கள் எடுத்துள்ளனர். இதேபோல் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த அடிலெய்டு டெஸ்டில் டிராவிட், முதல் இன்னிங்சில் 233 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 78 ரன்களை எடுக்க இந்திய அணி கங்குலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியை நிகழ்த்திக் காட்டியது. அப்போது “ஒரே டெஸ்டில் 300க்கும் மேற்பட்ட ரன்களை நான் கூட எடுத்ததில்லை” என்று ரிக்கி பாண்டிங் இந்த இன்னிங்சை வியந்து பாராட்டினார்.