ட்ரெண்டிங்கில் சச்சின்...! 'டிவிட்டரில் இந்திய அளவில் மூன்றாவது இடம்...' - இந்த தடவ வேற ஹெஷ்டேக்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் வீரரான சச்சினுக்கு ஆதரவாக #NationWithSachin என்ற ஹெஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட வேளாண்சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலகளவில் சில பிரபலங்கள் கருத்து வரும்நிலையில் பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்திருந்தார்.
அவரையடுத்து மியாக்ஹலிபா, அமண்டா, ரூபி கவுர், கிரேட்டா தண்பர்க் ஆகியோரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை பதிவிட்டிருந்தனர்.
இதன்காரணமாக, விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு பதிலடியாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்' எனவும் #IndiaTogether #IndiaAgainstPropaganda என்ற ஹெஷ்டேக்கையும் பதிவிட்டிருந்தார்.
அதன்பின் சிலர் சச்சினுக்கு எதிராகவும் சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பரவின. ஆனால் தற்போது சச்சின் டெண்டுல்கருக்கு ஆதரவாக #NationWithSachin என்ற ஹெஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியளவில் தற்போது #NationWithSachin என்ற ஹெஷ்டேக் 3-வது இடத்தில் உள்ளது.

மற்ற செய்திகள்
