#VIDEO 'சச்சின்' இதுலயும் 'கில்லாடி' தான்... என்ன ஒரு 'பெர்ஃபெக்ட் ஒர்க்...' 'தந்தை மகனுக்காற்றும் உதவி...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தனது மகன் அர்ஜூனுக்கு சச்சின் ஹேர்கட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலின் மையமாக மஹாராஷ்ட்ரா மாநிலம் உள்ளது. தலைநகர் மும்பையில் கட்டுக்கடங்காமல் வைரஸ் பரவி வருகிறது. இதனால் சாதாரண தொழிலாளர்கள் முதல், விஐபிக்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அங்கு இன்னும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சச்சின் வெளியிட்டுள்ள புதிய பதிவில், குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும், அவர்களுடன் ஜிம்மில் பயிற்சி செய்வதாக இருந்தாலும், அல்லது தலை முடியை வெட்டிவிடுவதாக இருந்தாலும் சரி. “ஒரு தந்தையாக அனைத்துமே செய்ய வேண்டும். ஹேர்கட் உன்னை மேலும் அழகாக மாற்றும் அர்ஜுன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியிருந்த சச்சின் தனக்கு தானே ஹேர் ஸ்டைலிஸ்டாக மாறினார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் வெளியிட்டிருந்த பதிவில், “ஸ்குயர் கட் விளையாடுவது முதல் எனது ஹேட் கட் செய்வது முதல் அனைத்தையும் ரசித்து செய்கிறேன். எனது புது லுக் எப்பது உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
