பெரும் சிக்கலாக உருவெடுக்கும் பாகிஸ்தான் வீரர்கள் மாயமான விவகாரம்.. காமன்வெல்த் முடிந்ததும் தெரியவந்த உண்மை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Aug 11, 2022 01:10 PM

காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள சென்ற 2 பாகிஸ்தான் வீரர்களை காணவில்லை என அந்நாட்டு குத்துச்சண்டை வாரியம் அறிவித்துள்ளது.

2 Pakistani Boxers Go Missing in Birmingham After CWG

Also Read | "ஒருவேளை ட்விட்டர வாங்க முடியாம போனா".. நெட்டிசன் கேட்ட கேள்வி.. மஸ்க் போட்ட பளிச் கமெண்ட்.. அடேங்கப்பா இப்படி ஒரு Backup பிளான் வச்சிருக்காரா..?

காமென்வெல்த் 2022

காமென்வெல்த் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் காமென்வெல்த் போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றிருக்கின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் பெர்மிங்காமில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கி கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது.

2 வீரர்களை காணவில்லை

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்த பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு குத்துச் சண்டை வீரர்களை காணவில்லை என அந்நாட்டு குத்துச் சண்டை வாரியம் தெரிவித்திருக்கிறது. நசீர் உல்லா மற்றும் சுலேமான் பலோச் என்ற இரண்டு பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர்கள் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு சொந்த நாடு திரும்ப இருந்த நிலையில் காணாமல்போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி முடிந்து பாகிஸ்தானுக்கு விமானம் ஏறுவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பாக வீரர்கள் காணாமல்போனது தெரியவந்திருக்கிறது. இவர்களுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பிரிட்டன் காவல்துறையினர் காணாமல்போன இரண்டு வீரர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

2 Pakistani Boxers Go Missing in Birmingham After CWG

குழு

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் குத்துச் சண்டை வாரிய செயலாளர் நசீர் டாங்,"இரு வீரர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள், குத்துச்சண்டை அணியுடன் வந்த கூட்டமைப்பு அதிகாரிகளிடம் இன்னும் உள்ளன" என்றார். இந்நிலையில், பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் (POA) குத்துச்சண்டை வீரர்கள் காணாமல் போன விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

முன்பாக, இலங்கையை சேர்ந்த இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு குத்துச் சண்டை வீரர்கள் காணாமல்போயிருப்பதாக அந்நாட்டு குத்துச்சண்டை வாரியம் தெரிவித்திருப்பது பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும்?.. மீண்டும் வைரலான செய்தி.. உண்மை என்ன?

Tags : #CWG 2022 #PAKISTANI BOXERS #MISSING #BIRMINGHAM #காமன்வெல்த் போட்டி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 2 Pakistani Boxers Go Missing in Birmingham After CWG | Sports News.