MISSING.. 'மைடியர் சன் மஜ்னு' வேறலெவல் விளம்பரம்.. பார்த்து ஆடிப்போன மக்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி என்றாலே, பத்திரிக்கை அடித்து, உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் நண்பர்கள் அனைவரது வீட்டிற்கும் சென்று கொடுத்து, அவர்களை திருமணத்திற்கு வரவேற்பது வழக்கம்.

இத்தனை முக்கியம் வாய்ந்த திருமண அழைப்பிதழில், மணமக்களின் பெயர்கள், தாய் தந்தை பெயர்கள் மற்றும் திருமணம் நடைபெறும் இடமும் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், சமீப காலமாக, இந்த திருமண அழைப்பிதழ்களின் முறையே ஒட்டு மொத்தமாக வேற விதமான வெர்ஷனாக மாறி வருகிறது.
மணமகன் கைது என படம் போட்டு, மணப்பெண்ணிடம் சிக்கிக் கொண்டார் என குறித்த அழைப்பிதழ், ஃபிளைட் டிக்கெட் மாடலில் வடிவமைக்கப்பட்ட டிசைன், வாட்ஸ் அப் குறுஞ்செய்தி போன்ற டிசைன் என பல டிசைன்களில் பத்திரிக்கை உருவாகி, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வரும். அதே போல, திருமணத்திற்கான பேனரிலும் இப்படி வெரைட்டி ஐடியாக்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
காணவில்லை
அந்த வகையில், தற்போது திருமணத்திற்கு தொடர்புடைய காணவில்லை என்னும் விளம்பரம் ஒன்று வைரலாகி வருகிறது. கொல்கத்தாவின் நாளிதழில் ஒரு இளைஞரின் படம் போட்டு காணவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த படத்தின் கீழ், 'வயது 24, உயரமான மற்றும் அழகான எங்களது அருமை மகன் மஜ்னுவை காணவில்லை. தயவு செய்து திரும்ப வா. நீ இல்லாததால், அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம்.
இரு கோரிக்கைகள்
உனது இரு கோரிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். நீ விரும்பியது போலவே லைலா தான் உன் மணமகள். அதே போல, திருமணத்திற்காக உன்னுடைய ஷெர்வானியை 'சுல்தான் - தி கிங் ஆஃப் ஷெர்வானி' என்னும் கடையில் வாங்க வேண்டும் என நீ விரும்பினாய். அதற்கும் நாங்கள் சம்மதிக்கிறோம். அவர்களின் புது கிளையான நியூ மார்க்கெட் அருகேயுள்ள கடைக்குச் செல்வோம். அங்கு கார் பார்க்கிங் வசதியும் உள்ளது.
பெற்றோர் உருக்கம்
மேலும், உன்னுடைய திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு, ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும், 'சுல்தான் - தி கிங் ஆஃப் ஷெர்வானி' கடையில் இருந்தே குர்தா வாங்கிக் கொள்ளலாம்' என காணாமல் போன மகன் மஜ்னு திரும்பி வர வேண்டி, அவரின் பெற்றோர் உருகி குறிப்பிட்டுள்ளனர்.
வினோதம்
அத்துடன் கீழே முகவரி மற்றும் தொலைபேசி எண், பேஸ்புக் ஐடி, உள்ளவற்றையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில், இளைஞர்கள் தேவையில்லாத காரணத்திற்காக எல்லாம் வீட்டை விட்டுப் போவதைப் போலவே, இந்த இளைஞரும் செய்துள்ள நிலையில், இந்த காரணம் ஒரு படி மேலே போய், சற்று வினோத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
