"ஒருவேளை ட்விட்டர வாங்க முடியாம போனா".. நெட்டிசன் கேட்ட கேள்வி.. மஸ்க் போட்ட பளிச் கமெண்ட்.. அடேங்கப்பா இப்படி ஒரு BACKUP பிளான் வச்சிருக்காரா..?
முகப்பு > செய்திகள் > வணிகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், நெட்டிசன் ஒருவருடைய கேள்விக்கு அளித்த பதில் பலரையும் ஆச்சர்யமடைய செய்திருக்கிறது.
Also Read | நெருங்கும் ட்விட்டர் வழக்கு.. எலான் மஸ்க் எடுத்த பரபர முடிவு.. மொத்த பங்கு சந்தையும் ஷாக் ஆகிடுச்சு..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
ட்விட்டரை வாங்கவில்லை
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் அதுகுறித்த விபரங்களை வெளியிடுமாறும் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் போலி கணக்குகள் தொடர்பான தகவல்களை வழங்கவில்லை எனக் கூறி அந்நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக மஸ்க் தரப்பு அறிவித்தது. இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்த விசாரணை அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை எதிர்த்து எலான் மஸ்க்-ம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், தனது டெஸ்லா நிறுவனத்தின் 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 7.9 மில்லியன் பங்குகளை மஸ்க் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனை அவரே தனது ட்விட்டர் பதிவின் மூலமாக உறுதிப்படுத்தியிருந்தார். அந்த பதிவில் ஒருவர்,"ஒருவேளை ட்விட்டரை மீண்டும் வாங்க முடியாமல் போனால் மீண்டும் டெஸ்லா பங்குகளை வாங்குவீர்களா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு "ஆம்" என பதில் அளித்திருக்கிறார் மஸ்க்.
போட்டி
அதேபோல, அந்த பதிவில்,"ஒருவேளை ட்விட்டர் நிறுவனத்தை வாங்கமுடியாமல் போகும்பட்சத்தில் உங்களுக்கான பிரத்யேக சமூக வலை தளத்தை உருவாக்க திட்டம் இருக்கிறதா?" என ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த மஸ்க்,"X.com" எனக் கமெண்ட் செய்திருந்தார். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
ஏனென்றால் கடந்த 1999 ஆம் ஆண்டு X.com நிறுவனத்தை மஸ்க் துவங்கியிருந்தார். பின்னர் அது பணப்பரிமாற்ற நிறுவனமான PayPal உடன் இணைக்கப்பட்டது. இதனை eBay நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டு வாங்கியது. இருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு X.com டொமைனை மஸ்க் மீண்டும் வாங்கியிருந்தார். இந்நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக வாய்ப்புள்ள தளமாக X.com-ஐ அவர் குறிப்பிட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | ஆண்கள் கட்டாயம் 2 பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும்?.. மீண்டும் வைரலான செய்தி.. உண்மை என்ன?