'இங்க தான் இருந்துச்சு’... ‘பூங்காவில் இருந்து திடீரென மாயமான புலி’... ‘அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்’...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூங்கா ஒன்றில், காணாமல் போன 9 வயது புலி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டு, மீண்டும் மாயமாகி இருப்பது, பூங்கா ஊழியர்கள் மற்றும் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

வயநாட்டில் இருந்து நெய்யார் லயன் சஃபாரி பூங்காவுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட 9 வயது புலி ஒன்று, பிரத்யேக கூண்டில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மதியம், கூண்டில் இருந்த கம்பியை வளைத்து, அந்தப் புலி தப்பியது தெரியவந்ததால், பூங்கா ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் பூங்கா அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணிநேரத்திற்குப் பின்னர், அந்தப் புலி பூங்காவின் உள்ளே ஓர் இடத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் சில மணிநேரத்தில் அந்தப் புலி மாயமானது. அடர்ந்த மரங்கள் நிறைந்த பூங்கா என்பதால், புலியை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில், பல குழுக்களாக அதிகாரிகள் பிரிந்து தேடுவதுடன், டிரோன் மூலமும் புலியை தேடி வருகின்றனர்.
புலி மாயமானதால், பூங்கா அருகில் வசித்து வரும் மக்கள் குடியிருப்பு பகுதிக்கும் நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். எனினும் பூங்காவை விட்டு புலி வெளியேற வாய்ப்பில்லை என்றும், பூங்காவின் உள்ளே தான் எங்கேயாவது ஒளிந்து இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
