Kaateri logo top

CWG 2022: 56 நாடுகள் வாங்குன பதக்கத்தை விட இவங்க அதிகமான மெடல் வாங்கிருக்காங்க.. யாருப்பா இந்த எம்மா மெக்கியோன்.?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Aug 09, 2022 10:55 AM

காமன்வெல்த் போட்டியில் 56 நாடுகள் பெற்ற பதக்கங்களை விடவும் கூடுதலாக பதக்கங்களை பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான எம்மா மெக்கியோன்.

Emma McKeon Has Won More Gold Than 56 Countries

Also Read | CWG 2022: "சாம்பியன்களின் சாம்பியன்".. சாதனை படைத்த பிவி சிந்து.. பிரதமர் மோடி வாழ்த்து..!

காமென்வெல்த் 2022

காமென்வெல்த் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் காமென்வெல்த் போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றிருக்கின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் பெர்மிங்காமில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கி நேற்று முடிவடைந்தது.

 Emma McKeon Has Won More Gold Than 56 Countries

எம்மா மெக்கியோன்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனையான எம்மா ஜெனிஃபர் மெக்கியோன் நான்கு முறை உலக சாதனை படைத்தவர் ஆவார். ஒலிம்பிக் போட்டிகளில் இவர் இதுவரையில் 11 பதக்கங்களை வென்றிருக்கிறார். ரியோ டி ஜெனிரோவில் நடந்த 2016 கோடைகால ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கத்தையும், 2020 டோக்கியோவில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் நான்கு தங்கப் பதக்கங்களையும் இவர் வென்றிருக்கிறார். இதனாலேயே ஆஸ்திரேலியாவின் மிகவும் மதிப்பு மிக்க வீரராக இவர் அறியப்படுகிறார்.

இந்நிலையில், இவர் இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் நீச்சலில் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி மற்றும் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற 72 நாடுகள்/பிரதேசங்களில் 16 நாடுகள் மட்டுமே எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Emma McKeon Has Won More Gold Than 56 Countries

4 ஆம் இடத்தில் இந்தியா

இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றதன் மூலம் நான்காம் இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என மொத்தம் 178 பதக்கங்களுடன் முதலிடத்திலும், போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 176 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. கனடா 26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Also Read | இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி.. சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் தல தோனி..!

Tags : #CWG 2022 #EMMA MCKEON #GOLD #AUSSIE SWIMMER EMMA MCKEON #காமென்வெல்த் 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Emma McKeon Has Won More Gold Than 56 Countries | Sports News.