‘வாவ்.. நல்ல இருக்குபா இது!’.. ‘நடந்து முடிஞ்சதும் பரவசத்தில் குழந்தை செய்த காரியம்’.. இதயம் தொடும் ‘வீடியோ!’
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்வாழ்க்கையில் முதல் முதல் செய்யும் எல்லாவற்றிற்குமே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

ஒரு விஷயத்தை செய்யும் தொடக்க காலத்தை நடைபழகும் காலம் என்று நாம் குறிப்பிடுவது உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அந்த நடைபழகும் காலத்தில் கிடைக்கும் அனுபவம் அலாதியானது தான். அது ஒரு புதிய பரவசத்தை தரும். பொதுவான விஷயங்களில் இருக்கும் தொடக்ககாலமான நடைபழகும் காலமே அந்த பரவசத்தை தருகிறது என்று சொன்னால், உண்மையில் நடைபழகும் காலம் எப்படி இருக்கும்?
This little guy takes his first steps and he’s so proud.... 🔊❤️❤️ pic.twitter.com/R2yQpXf1oT
— The Feel Good Page ❤️ (@akkitwts) November 13, 2020
அப்படித்தான் இந்த வீடியோவில் குழந்தை ஒன்று முதல் முதலில் நடக்க தொடங்குகிறது. முதல் முறையாக,எந்த வித சப்போர்ட்டும் இன்றி, அப்பாவின் பிடியில் இருந்து ரிலீஸ் ஆகி, அடி மேல் அடி எடுத்து வைத்து, தான் முதன் முதலில் சுயமாக நடக்கும் பரவசத்தை அனுபவித்து பெரும் ஆற்றலுடன் ஆர்ப்பரித்து சிரிக்கிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

மற்ற செய்திகள்
