'இந்த சந்தோஷத்துலதான் நேத்து ஸ்டம்ப் அப்படி பறந்துதா?!!'... 'கேப்டன் பகிர்ந்த ஹேப்பி நியூஸ்!!!... 'வாழ்த்து மழையில் தமிழக வீரர்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராத் அணியும், பெங்களூரு அணியும் மோதிய நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் சேலத்தை பூர்வீகமாக கொண்ட தமிழக வீரர் நடராஜன் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். நேற்றைய போட்டியிலும் டிவில்லியர்ஸின் விக்கெட்டை அற்புதமாக யார்க்கர் பந்து வீசி நடராஜன் அவுட் செய்து பாராட்டுகளை குவித்து வருகிறார். டிவில்லியர்ஸ் மட்டும் இன்னும் அதிக நேரம் களத்தில் இருந்திருந்தால் ஆர்சிபி அணி அதிக ரன்களை எடுத்திருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்று அடுத்த தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் போட்டிக்கு பின் பேசிய கேப்டன் டேவிட் வார்னர், "நடராஜன் மற்றும் அவருடைய மனைவிக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு என்ன ஒரு அருமையான பரிசை நடராஜன் கொடுத்துள்ளார்" என மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக 2018ஆம் ஆண்டு நடராஜன்-பவித்ரா தம்பதியினருக்கு திருமணம் நடந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க நடராஜன் அமீரகம் கிளம்பியபோது, அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், இத்தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
#மகள்களைப்பெற்றஅப்பாக்கள் 😍 @Siva_Kartikeyan @Natarajan_91 pic.twitter.com/XLWiWbFVsM
— Sathish (@actorsathish) November 7, 2020

மற்ற செய்திகள்
