“என்ன ஒரு ஆனந்தம்”.. “இந்த மகிழ்ச்சி எப்போதும் இவங்களுக்கு கிடைக்கனும்”.. நெகிழ்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நாற்று நடும் விவசாயிகள் அழகாக பாடல் கேட்டுக்கொண்டும் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடனும் நாற்று நடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்கிற ரீதியில் திரை பாடல்களுக்கு ஏற்ப மழையூர் கிராமத்து விவசாயிகள் வயலில் நின்றபடி ஆட்டமாடி பாட்டுப் பாடி நாற்று நடும் வீடியோ பலராலும் பகிரப்படும் பாராட்டப்பட்டும் வருகிறது.
எவ்ளோ அழகா இருக்கு 🥳வயல் நடவு பணியில் ஆனந்தமா ஒரு ஆட்டம் விவசாயிகள் 🥰🥰🥰அவங்க எவ்ளோ சந்தோஷ்மா இருக்கறது பாக்க நமக்கு ஒரு மனசுல ஒரு சந்தோஷ்ம் 🥳🥳இந்த மகிழ்ச்சி எப்போதும் இவங்களுக்கு கிடைக்கனும்
இடம் : ஆலங்குடி ( புதுக்கோட்டை)#Master @actorvijay pic.twitter.com/axhG9H8Pua
— ᗰᖇ.ᗯᕼITE🤍 (@RajeshOyite) October 25, 2020
இத்தனை அழகாக வயலில் நடவு பணியில் ஆனந்தமாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நாற்று நடும் இந்த விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பதற்கு நமக்கும் மனதில் ஒரு சந்தோஷம் பிறக்கிறது. இந்த மகிழ்ச்சி எப்போதும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பலரும் இணையதளத்தில் கருத்துகளை பதிவிட்டு, இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
