‘எனக்கு வேற வழி தெரியல’.. ‘என் பிள்ளைகளை காப்பத்தணும்’.. தாய் எடுத்த ‘கண்கலங்க’ வைக்கும் முடிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுழந்தைகளில் மருத்துவ செலவுகளுக்காக தனது அனைத்து உறுப்புகளையும் தாய் ஒருவர் விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த 44 வயதான சாந்தி என்ற பெண் தனது குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக தனது உடல் உறுப்புகளை (இதயம் உட்பட) 20 லட்சம் ரூபாய்க்கு விற்க உள்ளதாக அறிவிப்பு பலகை ஒன்றை வைத்திருந்தார். சாந்தியின் மகன்கள் இருவர் சாலை விபத்துகளில் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவரது மகள் நரம்பியல் நோயால் அவதிப்பட்டதால் அவரது பார்வையும் பாதித்துள்ளது. இதனால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
சாந்தி தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கொச்சி நகரத்தின் புறநகரில் உள்ள வரப்புழாவில் ஒரு வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் வாடகை சரியாக செலுத்த முடியாததால், அவர் வீட்டை காலி செய்து சாலையோரத்தில் கூடாரம் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த சாந்தி, ‘எனது மூன்று குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டுள்ளதால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்படியொரு பலகை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. உதவி வேண்டிதான் இந்த பலகை வைத்துள்ளேன்’ என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் அரசாங்கத்தின் கவனத்துக்கு வந்ததும், அந்த குடும்பம் காப்பகத்துக்கு மாற்றப்பட்டது. குழந்தைகளின் சிகிச்சையை கவனித்துக்கொள்வதாகவும் அம்மாநில அரசு உறுதியளித்தது. சில தன்னார்வ அமைப்புகள் சாந்தியின் குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க முன்வந்துள்ளன. இதனால் சாந்தியின் குடும்பத்தினர் தற்போது வாடகை வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்
