'விராட் கோலிக்கு வரப்போகும் ப்ரோமோஷன்'... 'மனைவியுடன் போட்டோ போட்டு சர்ப்ரைஸ் கொடுத்த கேப்டன்'... வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கேப்டன் விராட் கோலி தான் அப்பாவாகப் போகும் மகிழ்ச்சி செய்தியைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து இருவரும் தங்களது துறையில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாகவும் இனிமேல் தங்கள் இருவர் அல்ல, மூன்று பேர் என விராட் கோலி தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜனவரி 2021 நாங்கள் 3 பேர் எனப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏 pic.twitter.com/0BDSogBM1n
— Virat Kohli (@imVkohli) August 27, 2020
And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏 pic.twitter.com/iWANZ4cPdD
— Anushka Sharma (@AnushkaSharma) August 27, 2020

மற்ற செய்திகள்
