இருக்குற 'பிரச்சனை' பத்தாதுன்னு... கொரோனா நோயாளியால் 'அச்சத்தில்' உறைந்த 'சென்னைவாசிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 15, 2020 04:15 PM

சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பரிசோதனையில் இந்த நபருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Corona patient escapes from Chennai and police in search

இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த நபர் இன்று காலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த நபரை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI