அதிக 'டேட்டா', அதிக 'வேலிடிட்டியுடன்'... புதிய 'சூப்பர்' பிளானை அறிமுகம் செய்துள்ள 'பிரபல' நிறுவனம்!...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 15, 2020 12:44 PM

ஜியோ நிறுவனம் புதிய 3GB ப்ரீபெய்ட் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

Jio Launches Rs 999 Prepaid Plan With 3GB Data for 84 Days

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ 999 எனும் புதிய ப்ரீபெய்ட் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3 ஜிபி அளவிலான தினசரி அதிவேக டேட்டாவை மொத்தம் 84 நாட்கள் பெறலாம். அத்துடன் 3 ஜிபி ஒதுக்கீடு தீர்ந்ததும் 64Kbps வேகத்தில் டேட்டாவை பெறலாம். மேலும் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்பிற்கு 3,000 நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா ஆகியவையும் இதில் வழங்கப்படுகிறது.

ஜியோவின் இந்த புதிய பிளானானது ஏற்கெனவே உள்ள ரூ 599 மற்றும் ரூ 555 ப்ரீபெய்ட் பிளான்களின் வரிசையிலேயே வருகிறது. இந்த திட்டங்கள் முறையே 2 ஜிபி மற்றும் 1.5 ஜிபி அளவிலான தினசரி அதிவேக டேட்டா நன்மைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.