'கொரோனாவை வீழ்த்த... இந்தியாவுக்கு தோள்கொடுத்த உலக வங்கி!'... அவசரகால நிதி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2500 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக வங்கி கொரோனா வைரசை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர்கள் தொகையை அவசரகால நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு 200மில்லியன் டாலர்கள், ஆப்கானிஸ்தானுக்கு 100மில்லியன் டாலர்கள், மாலத்தீவுகளுக்கு 7.3 மில்லியன் டாலர்கள் மற்றும் இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்களை உலக வங்கி வழங்க உள்ளது.
உலக வங்கியின் முதற்கட்ட உதவி 1.9 பில்லியன் டாலர்களாகும். இது 25 நாடுகளுக்கான உதவித்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 40 நாடுகளுக்கு நீட்டிக்கப்பட்டு விரைவு கதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில் இந்தியாவுக்குத்தான் அதிகமாக 1 பில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது.
இதனால், “சிறந்த தடம்காணும் முறை (கான்டாக்ட் ட்ரேசிங்) , தொடர்பு தடம்காணுதல், மருத்துவப் பரிசோதனை நிலையங்கள், தனிப்பட்ட பாதுகாப்புக் கவசங்கள், புதிய தனிமைப்பிரிவு வார்டுகள் ஆகியவற்றை உருவாக்கலாம்” என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்கள் உதவித்தொகை அறிவிக்க இருக்கிறது. உலகின் ஏழை மக்கள் சுற்றுச்சூழல் ஆகியவைதான் பிரதான கவனம். மேலும் விரைவில் இதிலிருந்து மீள்வது பொருளாதார சரிவையும் தடுக்கும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
