‘நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட’.. ‘அசத்தல் அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Saranya | Nov 01, 2019 09:49 PM

பயனாளர்களின் பாதுகாப்பிற்காக கைரேகை மூலம் செயலியை திறக்கும் (Fingerprint Authentication) வசதியை செய்துள்ளது வாட்ஸ்அப்.

WhatsApp Gets Fingerprint Lock Feature on Android After iPhone

உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலிகளில் ஒன்றாக உள்ளது வாட்ஸ்அப். பல்வேறு புதிய அப்டேட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து வரும் வாட்ஸ்அப் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அசத்தல் அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

முன்னரே ஐஃபோன்களில் வந்துவிட்ட கைரேகை மூலம் செயலியைத் திறக்கும் வசதியை ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. பயனாளர்கள் இந்த வசதியைப் பெற வாட்ஸ்அப்பின் புதிய வெர்சனை டவுன்லோடு செய்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது.

செட்டிங்க்ஸுக்குச் சென்று, அக்கவுண்ட்டை க்ளிக் செய்து, அதில் ப்ரவைசியை க்ளிக் செய்தால் ஃபிங்கர் பிரின்ட் லாக் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதைத்தேர்வு செய்து உங்கள் கைரேகையைப் பதிவு செய்தால் போதும் உங்கள் வாட்ஸ் அப் செயலியை உங்களைத்தவிர யாரும் திறக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #WHATSAPP #UPDATE #FINGERPRINT #LOCK #FACEBOOK #ANDROID #IPHONE