'ஹாய்.. கிச்சன நல்லாத்தான் வெச்சிருக்கீங்க'.. அதிர்ந்து போன பெண்.. பதைபதைப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Oct 29, 2019 11:50 AM
ஒடிசாவில் மாயூர்ப் மாவட்டத்தில் உள்ள பாரிபாடா என்ற ஊரில் வீட்டுக்குள் அதீத விஷம் கொண்ட பாம்பு ஒன்று புகுந்ததை அடுத்து நீண்ட முயற்சிக்கு பிறகு சிறை பிடிக்கப்பட்டது.
பெருகி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, காட்டில் வசிக்கக் கூடிய உயிரினங்கள், நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. அவற்றுக்கான உணவு, நீர்நிலைகள் யாவற்றையும் தேடி மனிதர்கள் ஆக்கிரமித்திருக்கும் இடங்களைத் தேடி வரத் தொடங்கிவிட்டன.
அப்படித்தான் ஒடிசாவில் சமையலறைக்குள் பெண் ஒருவர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, இடையில் பாம்பு சீறுகிற சத்தம் கேட்கத் தொடங்கியதைக் கேட்டு அதிர்ந்தார். பாத்திரங்களை விலக்கிப் பார்த்தபோது கொடிய நாகப்பாம்பு இருந்ததைப் பார்த்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினரை அழைக்க, அவர்கள் பாம்பாட்டிக்கு தகவல் சொல்லியுள்ளனர். சமையலறைக்குள் நுழைந்து ஆட்டம் காட்டிய பாம்பினை பாம்பாட்டி மிக லாவகமாக பிடித்து காட்டுக்குள் கொண்டு சென்றுவிட்டதன் பிறகே அப்பகுதியினர் நிம்மதியாகினர்.