'நல்ல பாம்புக்கே சோப்பு போட்ட வம்சம்'...'இவங்க வம்சம்'...'தலைக்கு எவ்வளவு தில்லு'...வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 15, 2019 02:59 PM

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற கூற்று உண்டு. சாதாரண தண்ணீர் பாம்பை கண்டாலே பலரும் பயப்படுவதுண்டு. ஆனால் இளைஞர் ஒருவர் நல்ல பாம்பிற்கு சோப்பு போட்டு குளிப்பாட்டி விடும் வீடியோ காண்போருக்கு கிலியை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளது.

Fearless Boy who bath the snake with soap video goes viral

இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில், இளைஞர் ஒருவர் கருநாக பாம்பிற்கு தண்ணீர் ஊற்றி குளிப்படுகிறார். அதன் பின்பு சோப்பு போட்டு நன்றாக தேய்த்து விடுகிறார். ஆனால் அந்த இளைஞரின் முகத்தில் சிறிதும் அச்ச உணர்வு இல்லாதது தான் ஆச்சரியத்தின் உச்சம். இறுதியாக பாம்பின் தலையை பிடித்து சோப்பால் தேய்த்து, வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து பாம்பை குளிப்படுவதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.

இதனை பரவலாக ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள், இந்த இளைஞருக்கு நிச்சயம் தைரியம் அதிகம் தான் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #TWITTER #SNAKE #SOAP