'நம்ம புள்ளைங்கலாம் பயங்கரம்'.. 'ஆன்லைன் கேம்க்காக'.. அப்பாவின் அக்கவுண்ட்டில் கைவைத்த 4-ஆம் வகுப்பு படிக்கும் மகன்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 08, 2019 01:17 PM

ஆன்லைன் கேம் விளையாடுவதில் இன்றைய காலத்து குழந்தைகள் அடிமையாகவே ஆகிவிடுகின்றனர்.

4th standard student uses fathers Paytm to play online games

அதிலும் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்டால், பெரியவர்களே எந்த எல்லைக்கும் செல்ல துணியும் நிலையில், 4-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் மன நிலை கேமுக்கு அடிமையானதன் பின்னர் என்னதான் செய்ய முடியும்? ஆம், லக்னோவில் 4-ஆம் வகுப்பு சிறுவன் ஒருவர் தந்தையின் செல்போனில் கேம் விளையாண்டு வந்துள்ளான்.

குறிப்பிட்ட ஒரு கேமின் பல தொடர் நிலைகளிலும் நன்றாக விளையாண்டு வெற்றிபெற்று வந்த சிறுவனுக்கு அடுத்த லெவலை தாண்ட வேண்டுமானால், பணம் கட்ட வேண்டும் என்று செக் வைத்தது அந்த கேம். உடனே என்ன செய்வது என்று யோசித்த சிறுவன் தனது தந்தையின் போனிலேயே இருந்த பேடிஎம் ஆப்பை பயன்படுத்தி பணம் செலுத்தியுள்ளான்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணம் செலுத்தியதால் தந்தைக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் 34 ஆயிரம் பணம் இழந்ததை அறிந்த தந்தை, சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார். விசாரித்த போலீஸார், எந்தக் கணக்கில் இருந்து பணம் பறிபோனதோ, அந்த கணக்குக்குரிய போன் நம்பரின் மூலமே பேடிஎம்மில் பணம் செலுத்தப்பட்டதை கண்டுபிடித்தனர்.

அதன் பிறகே, தனது மகனை விசாரித்துள்ளார் அந்த தந்தை. அப்போது சிறுவன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளான். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : #GAME #ONLINE #MINORBOY