திருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்..! வெளியான அதிரவைக்கும் காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 17, 2019 04:35 PM

உத்திரப்பிரதேசத்தில் திருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Man gives triple talaq within 24 hours of marriage in Uttar Pradesh

உத்திரபிரதேச மாநிலம் ஜாகன்ஹிராபாத் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹே ஆலம். கடந்த ஜூலை மாதம் 13 -ம் தேதி ருக்சனா பனோ என்ற பெண்ணுடன் ஷாஹே ஆலமிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் வீட்டார் வரதட்சணையாக இருசக்கர வாகனம் ஒன்றை கொடுக்க இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் திருமணம் முடிந்ததும் பெண்வீட்டார் கூறியபடி இருசக்கர வாகனம் கொடுக்க முடியாத சூழல் உண்டானதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷாஹே ஆலம் திருமணமான 24 மணிநேரத்தில் தனது மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இதனைக் கேட்டு பெண்வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் ஷாஹே ஆலம் மற்றும் அவரது குடும்பத்தார் மீது புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த புகார் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #TRIPLE TALAQ #UTTARPRADESH #WIFE #MARRIAGE