'கணவரைக் காணோம், பதறிய மனைவி’... ‘அலுவலகம் போய் பார்த்தபோது’... காத்திருந்த ‘அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jul 30, 2019 03:50 PM

அலுவலகத்துக்கு சென்ற கணவர் வீடு திரும்பாததால், பதறிப்போய் கணவரை தேடிச் சென்ற மனைவிக்கு, கணவர் வேறொரு பெண்ணுடன் மாயமான சம்பவம் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

tourism government officer suspended in rameshwaram

ராமேஸ்வரத்தில் இயங்கிவரும், தமிழ்நாடு ஹோட்டல் மேலாளராக இருந்து வந்தவர் யுவராஜ். இவர் தனது மனைவி ரேகா மற்றும் 3 வயதுக் குழந்தையுடன் காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்குக் குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி பணிக்குச் சென்ற யுவராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் ஹோட்டல் தமிழ்நாட்டுக்குச் சென்ற ரேகா, அங்கிருந்த ஊழியர்களிடம் தன் கணவர் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, ஹோட்டல் வளாகத்தில் உள்ள மேலாளருக்கான குடியிருப்பில் கவிதா என்ற பெண்ணை தன் மனைவி எனக் கூறி, அவருடன் யுவராஜ் தங்கியிருந்ததாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ரேகா அதிர்ச்சியடைந்துள்ளார். ஹோட்டல் ஊழியர்களுக்கும் யுவராஜின் மனைவி கவிதா இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ராமேஸ்வரம் மகளிர் காவல் நிலையத்தில் ரேகா புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னை சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய கவிதாவுக்கும், யுவராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவராஜ் ராமேஸ்வரத்தில் மேலாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட யுவராஜ், ஏற்கெனவே திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ள கவிதாவை தன் மனைவி எனக் கூறி ராமேஸ்வரம் ஹோட்டல் வளாகத்தில் உள்ள தனது குடியிருப்பில் தங்க வைத்ததும் தெரியவந்தது. மேலும், தன் மனைவி ரேகாவை, யுவராஜ் ஹோட்டல் தமிழ்நாட்டுக்கு ஒருமுறைகூட அழைத்து வந்ததில்லை. இதனால் அங்குள்ள ஊழியர்களுக்கும் சந்தேகம் எழவில்லை.

இதனிடையே இது குறித்து சென்னையில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்திலும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து தலைமறைவான யுவராஜுவை சுற்றுலாத்துறை நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags : #ILLEGAL #AFFAIR #RAMESHWARAM