KARNATAKA : திருமண விழாவில் நடனமாடிக் கொண்டே வந்த 23 வயது இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்.! அதிர்ச்சியில் உறவினர்கள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்25, நவம்பர் 2022, பெங்களூரு: திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண் ஒருவர் ஆடிக்கொண்டே வந்து திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Also Read | "கடுமையான தண்டனை கிடைக்கணும்".. நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி..!
திருமண நிகழ்ச்சியில் தோழிகள் கலந்துகொண்டு வெல்கம் டான்ஸ் ஆடி மணமக்களை ஸ்டேஜுக்கு அழைத்து வருவது வழக்கம். பெரும்பாலும் உறவுக்கார அல்லது நட்பு வட்டத்தில் இருக்கும் பெண்களே இந்நிகழ்வுகளில் பங்குபெறுவர். அப்படி திருமண நிகழ்வு ஒன்றிற்காக வந்திருந்த சுமார் 23வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தான் இந்நிகழ்வில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்த ஜோஸ்னா லூயிஸ் (23) என்பவர் உடுப்பியில் உறவினரின் திருமண விழாவில் கலந்துகொண்டார். உடுப்பியின் பிரம்மவர் தாலுக்கா, கோலலகிரி அருகே உள்ள ஹவாஞ்சே என்ற இடத்தில் நிகழ்ந்த உறவினரது திருமண விசேஷத்திற்காக, அவர்களின் வீட்டிற்கு வந்த ஜோஸ்னா, இரவு 8.30 மணியளவில் மணமக்களின் ரிசப்ஸனுக்கான கொண்டாட்டத்தில் நடனமாடிக்கொண்டே வந்தபோது திடீரென மயங்கி நிலைதடுமாறி முன்னோக்கி விழுந்தார்.
உடனடியாக பதறிய உறவினர்கள் ஓடிவந்து அந்த இளம்பெண்ணை பார்க்க, அவர் பேச்சுமூச்சின்றி இருந்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண்ணை, அவரது உறவினர்கள் அங்குள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜோஸ்னா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சோக நிகழ்வை அடுத்து, இது குறித்து பிரம்மாவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ஜோஸ்னாவுக்கு எந்த நோயும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
