'குளிக்குறது இல்ல'...'ஷேவ் பண்றது இல்ல'...'மனைவி கொடுத்த அதிர்ச்சி'...அதிர்ந்து போன கணவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 13, 2019 02:54 PM

கணவர் கிட்டத்தட்ட ஒரு வாரமாக குளிக்காமல் ஷேவ் பண்ணாமல் இருந்ததால் மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband doesn\'t shave and bathe MP woman files for divorce

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.இதுவரை அந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை.இந்நிலையில் எவ்வளோவோ சொல்லியும் கடந்த ஒரு வாரமாக தனது கணவன் தனது தாடியை ஷேவ் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும்,ஒரு வாரத்திற்கும் மேலாக அடிக்கடி குளிக்காமல் இருப்பதால் விவாகரத்து கோரி மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் விவகாரத்திற்கான காரணத்தை அறிந்த நீதிபதி அதிர்ந்து போனார்.இதனையடுத்து 6 மாத காலத்திற்கு கணவன்- மனைவியை பிரிந்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம்.அதன் பிறகு விவாகரத்து குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தற்போதுள்ள தம்பதிகள் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் விவாகரத்து கேட்பதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவி தன்னை ஷேவ் செய்ய வேண்டும் என நிர்பந்திப்பதாவும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதாகவும் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MADHYA PRADESH #BHOPAL #SHAVE #DIVORCE #HUSBAND