'நீ கேட்டா நான் கொடுக்கணுமா'?...'பெண்ணிற்கு' நடந்த கொடூரம்'... பதறவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 14, 2019 04:27 PM

தனது சம்பள பணத்தை கேட்டதற்காக நடுரோட்டில் வைத்து பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mob of men dragging a woman by her hair and brutally thrashing her

உத்திரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,அந்த பகுதியில் இருக்கும் சலூன் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.மாத தொடக்கத்தில் சம்பள பணம் வராததால்,தனது சம்பள பணத்தை கேட்பதற்காக,தான் வேலை செய்யும் சலூனிற்கு சென்றிருக்கிறார்.சலூனிற்கு சென்ற அந்த பெண்,சம்பள பணம் ஏன் இன்னும் வரவில்லை எனவும்,தான் வேலை செய்ததற்கான சம்பள பணத்தை வழங்குமாறும் கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சலூன் உரிமையாளர்,தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை திட்டியுள்ளார்.இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில்,கடையின் உரிமையாளர் அந்த பெண்ணை திடீரென தாக்க தொடங்கினார்.இதில் நிலை குலைந்து போன அந்த பெண் கீழே சரிந்துள்ளார்.இந்நிலையில் சலூன் கடைக்காரருடன் சேர்ந்து மேலும் இரண்டு பெரும் அந்த பெண்ணை தாக்கினார்கள்.அவர் கையில் இருந்த பெரிய தடியை வைத்து அந்த பெண்ணை அடிக்க முயற்சித்தார்.

இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அந்த பெண்ணை காப்பாற்றினார்கள்.பெண் என்றும் பாராமல் பொது இடத்தில வைத்து பெண் ஒருவர் தாக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #ATTACKED #NOIDA #UTTAR PRADESH