‘நீங்க எல்லாரும் தான அவரு வேணுனு கேட்டீங்க..’ போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய வீரர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jul 01, 2019 04:47 PM

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

You wanted Rishabh Pant there he is at no 4 says Rohith Sharma

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 337 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்துள்ளது. போட்டியின்போது இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்ட்யா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் களமிறக்கப்பட்டார்.

முன்னதாக ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார்.  பன்ட் அணியில் சேர்க்கப்பட்டபோதும் விஜய் ஷங்கருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுவரை 3 போட்டிகளில் அவர் எதிர்பார்த்தபடி விளையாடாத காரணத்தால் 11 பேரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பன்ட் களமிறக்கப்பட்டுள்ளார்.

போட்டிக்குப் பிறகு பேசிய துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் பாண்ட்யாவுக்கு முன்னதாக பன்ட் களமிறக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரோஹித், “பன்ட், பாண்டியாவுக்கு முன்னர் களமிறங்கியது எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. நீங்கள் எல்லோரும் ரிஷப் பன்ட் விளையாட வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்.  இந்தியாவில் இருந்து இங்கு வரை அப்படித்தானே சொன்னீர்கள். ரிஷப் பன்ட் எங்கே ரிஷப் எங்கே என, அதனால்தான் அவர் 4வது இடத்தில் களமிறங்கினார்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #INDVSENG #TEAMINDIA #ROHITHSHARMA #RISHABHPANT