‘இவங்கள ஜெயிக்கறவங்களுக்குத் தான் வேர்ல்டு கப்..’ பிரபல முன்னாள் வீரர் கருத்து..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 28, 2019 06:26 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்குச் செல்லும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

Whoever beats India will win World cup says Michael Vaughan

இதுவரை 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி இந்த முறை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 6 போட்டிகளில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நியூசிலாந்துக்கு எதிரான போட்டியைத் தவிர 5ல் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வான், “இப்படி வைத்துக்கொள்வோம். இந்த முறை இந்தியாவை வீழ்த்தும் அணிக்கே உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வரும் 30ஆம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி. இந்த சூழலில் மைக்கெல் வானின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #INDVSENG #MICHAELVAUGHN