இந்திய வர்ணனையாளர் ஒரு அணி சார்பாக பேசுவதாக ஐசிசியிடம் புகார் அளித்த ரசிகர்..! கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 28, 2019 09:58 AM
இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சிரேகர் மீது ரசிகர் ஒருவர் ஐசிசியிடம் புகார் கடிதம் ஒன்றை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

12 -வது உலக்கோப்பைத் தொடர் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2 -ம் இடத்தில் இந்தியா இருந்து வருகிறது. முன்னதாக நியூஸாந்துக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் தடைப்பட்டது. அதனால் உலகக்கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி விளையாடி வருகிறது.
நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் மிக குறைவான போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேகர் மீது, கிரிக்கெட்டில் ஒரு அணியின் சார்பாக பேசிவதாக ரசிகர் ஒருவர் ஐசிசிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
I am unahappy with Sanjay Manjerekar's commentary. I wrote to ICC about it. #CWC19 pic.twitter.com/KzgqtLHuzU
— Addie Kumar (@adityeah) June 22, 2019
