'யாருடைய கேட்ச் பெஸ்ட்'... 'கேள்வியெழுப்பிய ஐசிசி'... 'வைச்சு செய்யும் நெட்டிசன்கள்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 28, 2019 02:20 PM
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரானப் போட்டியில் தோனி, ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்து மீண்டும் தனது அசாத்திய விக்கெட் கீப்பிங் திறமையை நிரூபித்தார்.

தோனி மின்னல்வேக ஸ்டம்பிங் செய்வதோ, அசாத்தியமான அபாரமான கேட்ச்களை பிடிப்பதோ புதிதல்ல. எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் பும்ரா வீசிய 27-வது ஓவரின் முதல் பந்து, பிராத்வெயிட்டின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தோனிக்கும், முதல் ஸ்லிப்பில் நின்ற ரோஹித்துக்கும் இடையே சென்றது. அதை அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார் தோனி. இந்த கேட்ச் தோனியின் விக்கெட் கீப்பிங் திறனை பறைசாற்றும் மற்றுமொரு கேட்ச்.
தோனி பிடித்த இதேமாதிரியான ஒரு கேட்ச்சை, நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பிடித்தார். உலகக் கோப்பையில் தொடர் தோல்விகளை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது விக்கெட் கீப்பிங்கை மட்டுமல்லாது அவரது ஃபிட்னெஸ் இல்லாத உடலமைப்பையும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக விக்கெட் கீப்பிங்கில் மிரட்டினார் சர்ஃபராஸ். அப்படி மிரட்டியபோது, ஒரு அபாரமான டைவ் கேட்ச்சையும் பிடித்தார்.
இரண்டு கேட்ச்களுமே ஒரே மாதிரியாக இருந்ததால், இரண்டில் எது சிறந்தது என ஒரு கேள்வியை எழுப்பி ஐசிசி டுவீட் செய்திருந்தது. அதற்கு ரசிகர்கள் பல மாதிரியான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
Dive and conquer, who did it better?#CWC19 pic.twitter.com/5Ln2DjgalG
— ICC (@ICC) June 27, 2019
Catch compare mar karo. Catch ke 0.5 seconds baad kaun kaisi position me tha usko dekho. Dhoni sprung back in action. Sarfaraz was struggling to even get up. pic.twitter.com/OdpCxok2K2
— The Sarcastic Jerk (@The_Sarcastic_J) June 28, 2019
