'ஆல்ரவுண்டர்'ன்னு சொன்னது ஒரு குத்தமா'... 'இந்திய வீரரை வச்சு செஞ்ச ரசிகர்கள்'... வைரலாகும் மீம்ஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 28, 2019 03:38 PM

உலகக்கோப்பை போட்டிகளில் சொதப்பினால், வீரர்கள் யாரிடம் சிக்குகிறார்க்ளோ இல்லையோ, மீம்ஸ் போடுபவர்களிடம் அழகாக சிக்கி கொள்கிறார்கள். அது போன்று தற்போது மீம்ஸ் போடுபவர்களிடம் வகையாக சிக்கி கொண்டவர் விஜய் ஷங்கர்.

Vijay Shankar failed to impress at the much talked about No 4

ஆல்-ரவுண்டரான விஜய் ஷங்கர் தொடர்ந்து சொதப்பி வருவது, அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்த மிகப்பெரிய கேள்வியினை எழுப்பியுள்ளது. இந்திய அணியில் தொடர்ந்து இரண்டு போட்டிகளாக 4வது இடத்தில் இறங்கி, சொற்ப ரன்னில் அவுட் ஆனது பல ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கிய அவர், 15 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்தார்.

இதனிடையே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4வது இடத்தில் இறக்கப்ட்ட விஜய்,  அதில் 29 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.  இப்படி தொடர்ந்து ரன் எடுக்காமல் சொதப்பி வந்த ஷங்கரை, நெட்டிசனஸ், பாரபட்சம் பார்க்காமல் மீம்ஸ்கள் மூலம் வறுத்தெடுத்துள்ளனர். 

அதோடு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், “வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் வெற்றியடைந்தது குறித்து இநியா மகிழ்ச்சியடையலாம். ஆனால், பேட்டிங்கில் இருக்கும் சுணக்கத்தை இந்தியா சரிசெய்தாக வேண்டும். ஷங்கருக்கு இன்னும் அதிகபட்சமாக ஒரு போட்டி கொடுக்கப்படலாம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #WORLDCUPINENGLAND #VIJAY SHANKAR #TROLLED #WEST INDIES VS INDIA