அவர்கிட்ட இருக்குற 'அதே தாகம்'.. அதனாலதான் அவர் 'சாதனைய' நெருங்க முடியுது.. பிரபல கோச் புகழாரம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 28, 2019 11:45 AM

இந்திய வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலியின் சாதனைகளை, பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் அஸாம் ஓரளவு நெருங்கிக் கொண்டிருப்பதாக, அந்த அணியின் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கூறியுள்ளார்.

babar azam has got Virat\'s hunger, Pakistan\'s batting coach

கடந்த புதன் கிழமை அன்று, (ஜூன் 26, 2019) நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே, லண்டனின் பிர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், நியூஸிலாந்தை பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் இளம் வீரர் பாபர் அஸாமின் அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும், பெரும்பாலும் பாகிஸ்தான் ரசிகர்களின் ஏகோபித்த ரசனைமிக்க ஆட்டக்காரராக கோலி மாறியிருக்கும் நிலையில், கோலியைப் போலவே அதிரடியாக பாபர் அஸாமும் ஆடிவருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.  இந்த போட்டியில் பாபர் அஸாம், 127 பந்துகளுக்கு 101 ரன்கள் எடுத்து, தனது அணியின் வெற்றிக்கு  வழிவகுத்ததோடு, கோலியின் சாதனைகளை நெருங்கிக் கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் கூறியுள்ளார். 

அதுமட்டுமன்றி தற்போதுவரை, 41 ஒருநாள் போட்டிகளில் விளையாண்டுள்ள கோலி தனது 75வது இன்னிங்ஸில் 3000 ரன்களைக் கடந்தார். ஆனால் இதனை 68 இன்னிங்ஸிலேயே பாபர் செய்துகாட்டியுள்ளார் என்றும் அவர் பேசினார்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #VIRATKOHLI #PAKVNZ #GRANTFLOWER #BABARAZAM