‘எல்லாரும் விளையாடுவாங்க ஆனா இது தோனியால மட்டும்தான் முடியும்..’ அவர் ஒரு லெஜண்ட்.. புகழ்ந்து தள்ளிய கேப்டன்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 28, 2019 11:15 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடந்துள்ளது. இந்திய அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த சாஹல், பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆட்டநாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெற்றிக்குப் பிறகு தோனியின் ஆட்டம் குறித்துப் பேசிய விராட் கோலி, “அணிக்கு என்ன தேவை என்பது தோனிக்குத் தெரியும். அதன்படி தான் மிடில் ஓவரில் ஆடி வருகிறார். அவரது அனுபவம் 10க்கு 8 முறை அணிக்கு சரியாகவே உதவியிருக்கிறது. சிறப்பாக விளையாடும் வீரர்கள் பலர் அணியில் உள்ளனர். ஆனால், தோனி மட்டும் தான் இந்த பிட்சில் எந்த ஸ்கோர் சிறந்தது என்ற தகவலைத் தருவார்.
இந்த பிட்சில் 265 ரன்கள் நல்ல ஸ்கோர் என்று அவர் சொன்னால் நாங்கள் 300 ரன்களுக்கு முயற்சிக்கவும் மாட்டோம். 230 ரன்களுக்குள் முடிக்கவும் மாட்டோம். அவர் இந்த விளையாட்டில் லெஜண்ட். அவருக்கு ஆதரவாகவே இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கோர் 250 ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் தோனி 270க்கு நெருக்கமாக கொண்டு வந்தார். கடைசி ஓவரில் அவர் அடித்த இரண்டு சிக்சர்கள் முக்கியமானது. பாண்ட்யாவும் சிறப்பாக விளையாடினார்” எனக் கூறியுள்ளார்.