‘மேற்கிந்திய வீரரைப் போல் விக்கெட்டை கொண்டாடிய கோலி’.. இணையத்தை கலக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 28, 2019 12:29 PM

மேற்கிந்திய வீரர் செல்டன் காட்ரெல்லை கிண்டல் செய்யும் விதமாக விராட் கோலி மைதானத்தில் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Kohli mocks Sheldon Cottrell\'s Salute celebration

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2 -வது இடத்துக்கு முன்னேறியது.

இப்போட்டியில் 72 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார். மேலும் கடந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சரியாக விளையாடததாக விமர்சிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் தோனி 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கமால் இருந்து அசத்தினார். 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து இந்திய அணி 268 ரன்களை எடுத்தது.

இதனை அடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் சஹால் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்.

இப்போட்டியில் மேற்கிந்திய வீரர் செல்டன் காட்ரெல் அவுட்டானதும், அவர் விக்கெட் எடுத்தால் கொண்டாடுவது போல் விராட் கோலியும் அதேபோல் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல் மேற்கிந்திய அணியின் கடைசி விக்கெட்டை எடுத்தவுடன் முகமது ஷமி சல்யூட் அடித்து கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #INDVWI #TEAMINDIA