'அப்படி என்ன சொன்னாங்க'?... 'செம கடுப்பான 'ரித்திகா'... வைரலாகும் வீடியோ !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 28, 2019 09:03 AM

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், இந்திய வீரர் ரோகித் சர்மா சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானதால், அவரது மனைவி கோபமடைந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Ritika reacts after Rohit Sharma is given out against West Indies

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற 34வது லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரராக ஹிட் மேன் ரோஹித் சர்மா களமிறங்கினார். அவர் தனது கணக்கை ஆரம்பித்து 18 ரன்கள் எடுத்திருந்த போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீமர் ரோச் வீசிய பந்து, ரோகித்தின் பேட் மற்றும் பேடு இடையே விக்கெட் கீப்பருக்கு சென்றது. உடனே அம்பயரிடம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவுட் கேட்க, களத்தில் இருந்த அம்பயர் அவுட் இல்லை என வழங்க மறுத்து விட்டார்.

இதையடுத்து கேப்டன் ஜேசன் ஹோல்டர், ரிவியூவை பயன்படுத்தி மூன்றாவது அம்பயரிடம் ரிவியூ செய்தார். அதில் பந்து பேட்டில் பட்டதற்கு தெளிவான ஆதாரம் இல்லாத போதும், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். இதனை பெவிலியனில் அமர்ந்து கவனித்து கொண்டிருந்த ரோகித் மனைவி ரித்திகா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். 'வாட்' இது எப்படி அவுட் ஆகும் என்ற முறையில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிற

Tags : #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #ICCWORLDCUP #ROHIT SHARMA #TEAM INDIA ##INDVWI #RITIKA SAJDEH