‘சல்யூட்’ அடித்து மேற்கிந்திய வீரரை கிண்டல் செய்த முகமது ஷமி..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 28, 2019 12:19 AM

மேற்கிந்திய வீரர் செல்டன் காண்ட்ரெல் போல் சல்யூட் அடித்து கிண்டல் செய்த முகமது ஷமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Mohammed Shami mock Sheldon salute during IND vs WI match

உலகக்கோப்பை லீக் போட்டியில் நேற்று(27.06.2019) நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா நிதானமாக ஆட்டத்தை கடைபிடித்தனர். அதில் ரோஹித் சர்மா 18 ரன்களில் எதிர்பாராத விதமாக அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் கூட்டணி சேர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அதில் ராகுல் 48 ரன்களில் அவுட்டாகி அரைசத வாய்ப்பை நழுவ விட்டார். இதனை அடுத்து வந்த விஜய் சங்கர்(14) மற்றும் கேதர் ஜாதவ்(7) அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் விராட் கோலி கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் விராட் கோலி 72 ரன்களும், தோனி 56 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை இந்திய அணி எடுத்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியின் கடைசி விக்கெட்டை எடுத்த முகமது ஷமி, மேற்கிந்திய வீரர் செல்டன் காண்ட்ரெல் போல் சல்யூட் அடித்து கிண்டல் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #SHAMI #INDVWI #TEAMINDIA