'தோனி, விராட் கோலியின் ஒரே மாதிரியான ஷாட்'... 'பிரபஞ்சத்துடன் ஒப்பிட்ட சிஎஸ்கே'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 28, 2019 02:58 PM

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரானப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தோனி அடித்த ஒரே மாதிரியான ஷாட்களை பிரபஞ்சத்துடன் சிஎஸ்கே அணி ஒப்பிட்டுள்ளது.

dhoni and virat kohli were performing nataraja shot

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய, 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அரைசதம் அடித்த விராட் கோலி 82 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் எம்.எஸ்.டோனி நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 38 பந்தில் 46 ரன்கள் சேர்க்க இந்தியா 250 ரன்னைத் தாண்டியது. இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது. டோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தோனியின் பேட்டிங் ஷாட் ஒரே மாதிரியாக அதாவது நடராஜா ஷாட் என்று வர்ணித்துள்ளது.