‘மேட்சில் இந்திய வீரர்கள் செய்த காரியம்..’ எதிர்ப்புத் தெரிவித்த இந்திய ரசிகர்களுக்குக் குவியும் பாராட்டுகள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jun 28, 2019 02:51 PM
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்றுள்ளது இந்தியா.

இந்தப் போட்டியின் போது விக்கெட்டைக் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் காட்ரெல் தனது வழக்கமான பாணியில் சல்யூட் அடித்து அதைக் கொண்டாடினார். பின்னர் காட்ரெல் ஆட்டமிழந்து வெளியேறும்போது அவரைக் கிண்டல் செய்யும் விதமாக இந்திய வீரர் ஷமி அவரைப் போலவே சல்யூட் அடித்தார். அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போது கேப்டன் விராட் கோலியும் காட்ரெல் சல்யூட்டைக் கிண்டல் செய்தார்.
முன்னதாகவே தான் ராணுவத்தில் பணிபுரிந்ததை நினைவுபடுத்தும் விதமாகவே சல்யூட் அடிப்பதாக ஷெல்டன் காட்ரெல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய வீரர்கள் இதைக் கிண்டல் செய்தது ராணுவத்தைக் கிண்டல் செய்ததுபோலத்தான் என இந்திய ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நாம் இந்திய ராணுவத்தை எந்த அளவுக்கு மதிக்கிறோமோ அந்த அளவுக்கு மற்ற நாட்டு ராணுவத்தையும் மதிக்க வேண்டுமென ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
