பணம் இல்லாம தவிச்சேன்!! வீட்டு வேலை செய்து வந்த பெண்ணுக்கு ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jan 12, 2023 06:17 PM

பொதுவாக ஒரு நபருக்கு வாழ்க்கையில் எந்த நிமிடத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே சொல்ல முடியாது. திடீரென வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் என சென்று கொண்டிருக்கும் போது அப்படியே மொத்த வாழ்க்கையையே திருப்பி போடுவது போல ஏதேனும் சம்பவங்கள் அரங்கேறலாம், அதனை கொஞ்சம் கூட அந்த நபர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.

West Bengal woman who works domestic help become millionare

Also Read | 2011 உலக கோப்பை ரகசியம்.. "தோனி என்கிட்ட சொன்ன வார்த்தை".. கம்பீர் Open டாக்.. "சும்மாவா கூல் கேப்டன்னு சொன்னாங்க"

அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது பெண் ஒருவருக்கு அரங்கேறி அவரை உச்சகட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் புதுல் ஹரி. நடுத்தர வயது பெண்ணான இவரது கணவர் கூலி வேலைக்கு சென்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பெரிய அளவில் அவருக்கு வருமானமும் இல்லாத காரணத்தினால், குடும்ப சூழல் வறுமை நிறைந்தும் இருந்ததாக தெரிகிறது. இதற்கு மத்தியில் புதுலின் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற சூழலில், மருத்துவ செலவுக்கும் பணமில்லாமல் தவித்து வந்துள்ளார். மறுபக்கம், மகளின் திருமண செலவுக்கும் பணம் இல்லாத நிலை இருக்க, கடுமையாக அவர்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இதன் காரணமாக, நிறைய இடங்களில் புதுல் ஹரி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கடன் வாங்கி இருந்தததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக சில வீடுகளிலும் புதுல் ஹரி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், தங்களின் குடும்ப நிலையை மாற்றும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சமீபத்தில் அரசு லாட்டரி டிக்கெட் ஒன்றை 30 ரூபாய் கொடுத்து புதுல் ஹரி வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில், அவர் வாங்கிய லாட்டரிக்கு சுமார் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக தெரிகிறது. இதனிடையே, இவ்வளவு பணம் வென்றதால் என்ன செய்வதென தெரியாமல் பயத்தில் போலீசையும் புதுல் அணுகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது பற்றி பேசும் புதுல், லாட்டரியில் வென்ற பணத்தைக் கொண்டு கடனை அடைப்பதன் மூலம் நிம்மதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், மகனின் மருத்துவ செலவு அளிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், ஒரு வீட்டை கட்டவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே வேளையில் தனது வேலையை விட மாட்டேன் என்றும் புதுல் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இத்தனை வருஷம் கூட இருந்து பாசமா பாத்துக்கிட்டா".. மறைந்த மனைவி.. "இரண்டு குழி தோண்டுங்க".. சோகத்தில் முடிவு எடுத்த முதியவர்!!

Tags : #WEST BENGAL #WOMAN #HELP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. West Bengal woman who works domestic help become millionare | India News.