‘வாழ்க்கையை மாற்றிய 3 மாச மிஷன்’!.. WEB SERIES-ஆக உருவாகும் பெண் போலீஸின் சாதனை.. அப்படி என்ன செய்தார்..?
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி காவல்துறை அதிகாரி சீமா தாகாவைப் பற்றிய வெப் சீரிஸ் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி சமயபூர் பத்லி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் சீமா தாகா. இவர் கடந்த வருடம் காணாமல் போன 76 குழந்தைகளை, 3 மாதத்துக்குள் மீட்டார். இதில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லியில் மட்டும் இல்லாமல், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காணாமல் போன பல குழந்தைகளை சீமா தாகா மீட்டுள்ளார்.
கல்லூரியிலிருந்து தேர்வாகி, நேர்காணலின் மூலம் போலீஸ் வேலை கிடைத்த ஒரே நபர் சீமா தாகாதான். தனது 20 வயதில் இருந்து காவல்துறையில் பணியாற்றி வரும் சீமா தாகாவின் கணவரும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். காணாமல் போன குழந்தைகளை மீட்டதற்காக சீமா தாகாவுக்கு துணை ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்தது.
இந்தநிலையில் சீமாவின் இந்தச் சாதனை வெப் சீரிஸாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து டுவீட் செய்த பாலிவுட் வர்த்தக நிபுணர் கோமல் நாதா, ‘சீமா தாகாவைப் பற்றிய வெப் சீரிஸை உருவாக்க அவரது கதைக்கான உரிமைகளை அப்ஸல்யூட் பின்ஜ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டதால், பதவி உயர்வுக்கான அவரது முறை வராத போதிலும், பதவி உயர்வு பெறப்பட்ட முதல் டெல்லி காவல்துறை அதிகாரி சீமாதான்’ என பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
