'ஆபீஸ் கலாச்சாரத்துக்கு நல்லா இல்ல'... 'ஜீன்ஸ், டி சர்ட்' போட்டுக்கிட்டு வராதீங்க'... அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Aug 30, 2019 12:17 PM

ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்டுகள் அணிந்து கொண்டு  தலைமை செயலகத்திற்கு வர பீகார் மாநில அரசு அதிரடி தடையினை விதித்துள்ளது.

Bihar government ban on wearing jeans and T-shirts in the secretariat

பீகார் மாநில அரசின் உயர்மட்ட செயலாளர் மகாதேவ் பிரசாத் தலைமை செயலக ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் மட்டுமல்லாது உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து மட்டத்திலான ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அரசின் உயர்மட்ட செயலாளர் மகாதேவ் பிரசாத்  வெளியிட்டுள்ள உத்தரவில் '' அலுவலக கலாச்சாரத்திற்கு எதிரான ஆடைகளை அதிகாரிகளும், ஊழியர்களுக்கும் அணிந்து வருவது தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்தது. இது அலுவலக நல்லொழுக்கத்திற்கு எதிரானது. எனவே அதிகாரிகளும் ஊழியர்களும் கண்ணியமாகவும், எளிமையாகவும் ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

வேலை செய்யும் இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கும் வெளிர் நிற ஆடைகளை தேர்வு செய்து அதை மட்டுமே அணிந்து வர  வேண்டும்” என்று மகாதேவ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : #JEANS T-SHIRTS #SECRETARIAT #BIHAR