'டான்ஸ் பண்ணுங்க சார்.. லைஃப் நல்லா இருக்கும்'.. ஒரே பாட்டில் வைரலான 'வேற லெவல்' டாக்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Aug 20, 2019 06:10 PM
உடலின் ஆரோக்கியம் கெட்டுப்போனால், மருத்துவர்கள் அவற்றை கவனித்து சரிசெய்ய இருக்கிறார்கள்.
எனினும் எல்லாவற்றுக்கும் மேலான மருந்து ஆரோக்கியமான செயல்பாடும், நேர்மறையான சிந்தனையும்தான். அதுவே நம்மை துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளவும், நோயில் இருந்து விலகியிருக்கவும் உதவுகிறது.
இதை உணர்த்தும்படியாக, விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் கிராடா சூர்ய நாராயணா என்பவர் ஆடியுள்ள டான்ஸ் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
மறைந்த தெலுங்கு நடிகரான அக்கினேனி நாகேஷ்வர ராவின் தீவிர ரசிகரான இவர், நாகேஷ்வர ராவின்"நேனு புட்டனு லோகம் மெச்சிந்தி" என்ற பாடலுக்கு ஆடிய துள்ளலான நடனம் இணையத்தில் வீடியோவாக வலம் வருவதோடு பலரையும் கவர்ந்துள்ளது.
இவர் இந்த வயதில் இப்படி புயல் போல ஆடியதும், கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகமே தொற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.