‘அடிக்காதீங்க கோயிலுக்குள்ள போகமாட்டேன்’.. தாழ்த்தப்பட்ட சிறுவனை கட்டிவைத்து அடித்த கும்பல்! நெஞ்சை பதைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 05, 2019 06:08 PM

கோவிலுக்குள் நுழைந்ததாக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சிறுவனை கட்டி வைத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Group of men thrash a Dalit boy in Rajasthan goes viral

ராஜஸ்தான் மாநிலம் பாலி என்னும் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நுழைய முயன்றதாக கூறி உயர்வகுப்பை சேர்ந்த சில நபர்கள், அந்த சிறுவனை கயிற்றால் கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தாழ்த்தப்பட்ட சிறுவனை தாக்கிய நபர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கைதானவர்களின் தரப்பில் இருந்து தாழ்த்தப்பட்ட சிறுவன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அச்சிறுவன் கோவில் பூசாரின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதனால் சிறுவனை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தாழ்த்தப்பட்ட சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் போலிஸார் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கை, கால்களை கட்டிவைத்து கொடூரமாக தாக்கப்படும் வீடீயோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் சிறுவன் கோவிலுக்குள் செல்ல முயன்றதற்காக தாக்கப்பட்டாரா? இல்லை பூசாரியின் மகளிடம் தவறாக நடக்கமுயன்றதற்காக தாக்கப்பட்டாரா? என போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #BIZARRE #DALIT #TEMPLE #RAJASTHAN