'யாரு பாத்த வேலை இது'...'வீடியோ கான்பிரன்சிங்யில் 'ஆபாச படம்'... அதிர்ந்த 'தலைமை செயலகம்'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 05, 2019 10:42 AM

அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீடிரென ஆபாச படம் ஓடியதால்,பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Porn Clip Plays During Government Video Conference in Jaipur

உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை சார்பில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டமானது,தலைமைச் செயலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மைய அறையில் நடைபெற்றது.துறை செயலாளர் முக்தா சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு,33 மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

அரசு வழங்கும் நல திட்டங்கள் மக்களுக்கு துரிதமாக சென்று சேர வேண்டும்,அதற்கு அதிகாரிகள் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என முக்தா சிங் அறிவுறுத்தி கொண்டிருந்தார்.திடீரென திரையில் சில விநாடிகள் ஆபாசப்படம் ஓடியது.இது அங்கிருந்த அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதிகாரிகள் கூச்சத்தில் நெளிந்தார்கள்.உடனே கூட்டம் நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

இதனிடையே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,துறை செயலாளர் முக்தா சிங் கூறியுள்ளார். இந்த சம்பவம் ராஜஸ்தான் அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags : #PORN CLIP #VIDEO CONFERENCE #MUGDHA SINGH #CIVIL SUPPLY DEPARTMENT #RAJASTHAN