BGM Shortfilms 2019

‘திடீரென கேட்ட சத்தம்’... ‘ஐபிஎஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு’... 'அதிர்ச்சியில் அதிகாரிகள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 14, 2019 02:42 PM

அடுத்த வருடம் ஓய்வுபெற உள்ளநிலையில், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், எடுத்த விபரீத முடிவால், சக அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

IPS Officer Shoots Himself in haryana faridabad

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், புதிய தொழில்துறை நகரின் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் விக்ரம் கபூர். கடந்த 2017-ம் ஆண்டு, ஹரியானாவின் மாநில சிவில் சர்வீஸிலிருந்து, ஐபிஎஸ் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர், வழக்குகளை திறமையாகக் கையாண்டு பொதுமக்களின் பாராட்டைப் பெற்றவர்.

இந்நிலையில், இவர் தான் வசித்து வந்த போலீஸ் குடியிருப்பில் இன்று காலை 6 மணியளவில், தனது போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்புறமாக பூட்டியிருந்த அறையிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து, பதறிய அவரது குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக விக்ரம் கபூர் மனவருத்தத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அவரது தற்கொலை குறித்த கடிதத்தில், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் மற்றொருவரின் பெயரை குறிப்பிட்டுள்ளதாக, காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக என்டிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபரிதாபாத் போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி சுபே சிங்  கூறும்போது, ‘விக்ரம் கபூர் தனது சர்வீஸ் ரிவால்வரால், தன்னைத்தானே சுட்டு தற்கொலை  செய்து கொண்டது வேதனை அளிப்பதாக உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார். 58 வயதான இவர் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில், நடந்த இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #IPS #HARYANA #VIKRAMKAPOOR